பா.ஜ.க. கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய வாலிபர் கைது

கோட்டூர் அருகே வீட்டை சூறையாடி விட்டு பா.ஜ.க. கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-07-03 18:45 GMT

கோட்டூர்:

கோட்டூர் அருகே வீட்டை சூறையாடி விட்டு பா.ஜ.க. கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தகராறு

கோட்டூர் அருகே கோட்டகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாய், சபிம், மாதவன் (வயது22). நண்பர்களான இவர்கள் 3 பேரும் காசாங்குளம் கிராமத்தில் உள்ள சாய் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது இவர்களுக்கும், காசாங்குளம் கிராமத்தை சேர்ந்த நேரு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வீடு சூறை; கொடிக்கம்பம் சேதம்

இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் நேருவின் வீட்டுக்குள் புகுந்து உள்ளே இருந்த பீரோ, கட்டில், டி.வி. உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

மேலும் வீட்டின் அருகே உள்ள நேருவின் கடையையும் அடித்து உடைத்தனர்.பின்னர் அவர்கள் காசாங்குளம் கிராமத்தின் சாலையோரம் இருந்த பா.ஜ.க. கொடிக்கம்பத்தையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது.

வாலிபர் கைது

இதுகுறித்து மன்னார்குடி பா.ஜ.க. அமைப்புச்சாரா தொழிலாளர் சங்க நகர தலைவர் ஜெயசீலன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சாய். சபிம் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்