பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-20 18:45 GMT

நெல்லை வண்ணார்பேட்டையில் பாரதீய ஜனதா கட்சி நெல்லை மாவட்ட மகளிர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளச் சாராயத்தை கண்டுகொள்ளாத, தி.மு.க. அரசின் மெத்தன போக்கை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெ்றது. நெல்லை வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயசித்ரா தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் கார்த்தீஸ்வரி முன்னிலை வகித்தார்.

இதில் நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர், தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பேசினார்கள். அப்போது மதுவிலக்கு மற்றும் கள்ளச் சாராயம் ஒழிப்பு தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்