மோடி மீண்டும் பிரதமராக வேண்டி மடிப்பிச்சை ஏந்திய பா.ஜனதா பெண் நிர்வாகி

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்று பொதுமக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.;

Update:2024-05-29 08:33 IST

பழனி,

நாடாளுமன்ற தேர்தல் நிறைவுப்பெற உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 1-ந்தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அன்றே வெளியிடப்பட உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்று அரசியல் கட்சியினர், பொதுமக்களிடையே தற்போதே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பழனி திருஆவினன்குடி கோவிலுக்கு பா.ஜனதா சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்க நிர்வாகி சரஸ்வதி நேற்று வந்தார். பின்னர் கோவில் வாசலில் அண்ணாமலை படத்துடன் அமர்ந்து பக்தர்களிடம் மடிப்பிச்சை ஏந்தினார். அதில் கிடைத்த காணிக்கையை பழனி கோவில் உண்டியலில் அவர் செலுத்தி வழிபட்டார்.

அப்போது அவா் கூறுகையில், நாடு முழுவதும் மோடி அலைவீசுகிறது. எனவே மீண்டும் 3-வது முறையாக மோடி பிரதமராக வேண்டும். கோவை தொகுதியில் அண்ணாமலை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என பழனி முருகனிடம் வேண்டுதல் வைத்து மடிப்பிச்சை எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினேன் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்