அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பா.ஜ.க. சார்பில் 7 பேர் குழு அமைப்பு

அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பா.ஜ.க. சார்பில் 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-29 18:44 GMT

சென்னை,

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும், சில கட்சிகளையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் கூட்டணியில் சேர்க்க பா.ஜனதா தீவிரம் காண்பித்து வருகிறது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்தவும், ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜனதா தேசிய செயலாளரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக சட்டமன்ற பா.ஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, மாநில தலைவர் அண்ணாமலை பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்