கமுதி அருகே பா.ஜ.க.வினர் சாலை மறியல்; 29 பேர் கைது

கமுதி அருகே பா.ஜ.க.வினர் சாலை மறியல் செய்தனர். இதில் 29 பேர் கைது நெய்யப்பட்டனர்

Update: 2022-11-02 19:09 GMT

கமுதி, 

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து அபிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.நிர்வாகிகள் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகளை தரக்குறைவாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கமுதியை அடுத்துள்ள அபிராமத்தில் பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.பி.கணபதி தலைமையில் மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலையில் பா.ஜ.க.வினர் மதுரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் அய்யப்பன், ராமமூர்த்தி, விஜயபாண்டியள் உள்பட 29 பேரை சாலை மறியலில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்