பிரதமர் மோடியின் தாயார் உருவப்படத்திற்கு பா.ஜ.க.வினர் மரியாதை
சங்கரன்கோவிலில் பிரதமர் மோடியின் தாயார் உருவப்படத்திற்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பழைய பஸ்நிலையம் அருகே பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவையொட்டி அவரது உருவப்படத்துக்கு பா.ஜனதா கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் நகர தலைவர் கணேசன், மகளிர் அணி தலைவி மகேஸ்வரி, மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், ராஜலட்சுமி, நகர பொருளாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் அந்தோணி ராஜ், காளிமுத்து, குருசாமி, சங்கர், செந்தில் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.