பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்
திருப்பத்தூரில் பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகா அரசு, காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் தமிழக அரசுக்கு தரவேண்டிய நீரை தராமல் மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கர்நாடக அரசை தட்டி கேட்காத தமிழக முதல்-அமைச்சரை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அன்பழகன், நகர தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் கலந்துகொண்டார்.
பொதுசெயலாளர்கள் கவியரசு, தண்டபாணி, ஈஸ்வர், உள்பட பலர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். முடிவில் பார்த்திபன் நன்றி கூறினார்.