அரசு வேலை வழங்கக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
சித்திரை திருவிழாவில் இறந்தவர் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கக்கோரி மதுரையில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை சித்திைர திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் துரதிருஷ்டவசமாக 5 பேர் இறந்தனர். இந்த நிைலயில் இறந்தவரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கக்கோரி மதுரை மாநகர் பா.ஜனதா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகம்் திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன், மாநில பொது செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு பா.ஜனதா சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மையினர் பிரிவு மாநில செயலாளர் சாம்சரவணன், தொழில் துறை பிரிவு மாநில செயலாளர் ஹரிவெங்கடேஷ், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர்கள் ஜோதிமணிவண்ணன், வினோத்குமார், மாவட்ட துணை தலைவர்கள் கீரைதுரை குமார், ஜெயவேல், பொருளாளர் ராஜ்குமார், மகளிரணி மாவட்ட தலைவி மீனா, துணை தலைவி செல்வி, மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் முரளிபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.