செங்கோட்டையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-21 18:45 GMT

செங்கோட்டை:

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி, தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, அய்யாவழி சிவச்சந்திரன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், அருள் செல்வன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் முத்துகுமார், பால்ராஜ், முத்துலட்சுமி, பால சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துபாண்டி, மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் மாரியப்பன், இளைஞர் அணி தலைவர் முப்புடாதி, மகளிர் அணி தலைவி மகாலட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்