மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்;
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு சொத்து வரி மற்றும் மின் கட்டணங்களை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் கலை மற்றும் கலாசார பிரிவு மாநில தலைவர் பெப்சி சிவா கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், ஓ.பி.சி. அணி மாநில துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதிஷ்குமார், ரமேஷ், முருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் அருணை ஆனந்தன், இறைமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.