களைத்திடு! களைத்திடு! மதுரை மாநகராட்சியை களைத்திடு! - தமிழ் எழுத்துப்பிழையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

தமிழ் எழுத்துப்பிழை கொண்ட பதாகையுடன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-25 09:23 GMT

மதுரை,

மதுரை மாநகராட்சியை கலைத்திட வலியுறுத்தி பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 'கலைத்திடுக' என்பதற்கு பதில் 'களைத்திடுக' என்ற எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் எழுத்துப்பிழையுடன் ஒட்டப்பட்ட பதாகையை கையில் ஏந்தியபடி மதுரை மாநகராட்சியை கண்டித்து பாஜகவினர் நடத்திய போராட்டம் அங்கிருந்தவர்கள் கவனத்தை பெற்றது.

முன்னதாக, மதுரை மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பாஜக கவுன்சிலர் பூமா மாநகராட்சியை கலைக்கக்கோரி கோஷம் எழுப்பினார். இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்கோஷம் எழுப்பியதால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.   



Tags:    

மேலும் செய்திகள்