தி.மு.க.வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க.வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை அவமதித்த தி.மு.க.வினரை கண்டித்து பெரம்பலூரில், பா.ஜ.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அண்ணாமலையின் புகைப்படத்தை அவமதித்த தி.மு.க.வினரையும், பெரம்பலூர் மாவட்டத்தில் வாட்ஸ்-அப் குரூப்பில் அண்ணாமலையை அவதூறாக பதிவிட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியை சேர்ந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவிகுமாரிடம் புகார் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.