குறிஞ்சிப்பாடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-07-23 18:02 GMT

குறிஞ்சிப்பாடி, 

கடலூர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து குறிஞ்சிப்பாடி பஸ் நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் கோவிலானூர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி கிருஷ்ணமூர்த்தி, ஜீவா வினோத்குமார், சுரேஷ் பிச்சைபிள்ளை, மாவட்ட பொருளாளர் ஜெனித் மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா கட்சியின் ஓ.பி.சி. பிரிவு மாநிலத்தலைவர் சாய் சுரேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் விஜயரங்கன், மாவட்ட செயலாளர் மூர்த்தி, அரசு ரங்கேஷ், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர்கள் ஆர்.பாபு, சுரேஷ், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், பரசுராமன் மற்றும் ராம்தாஸ், ராம்குமார், கிருஷ்ணமூர்த்தி, கல்யாண்ராமன், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தலைவர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்