பா.ஜ.க. பிரமுகர் நூதன ஆர்ப்பாட்டம்

சேறும், சகதியுமான சாலையை சீரமைக்காததை கண்டித்து பா.ஜ.க. பிரமுகர் நூதன ஆர்ப்பாட்டம்

Update: 2022-11-02 18:45 GMT


மயிலாடுதுறை நகராட்சி 31-வது வார்டு அறுபத்திமூவர்பேட்டை பகுதியில் பெரியகுளம் மேலத்தெரு உள்ளது. இந்த பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள 500 மீட்டர் சாலை கடந்த 1 ஆண்டாக குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக பெரியகுளம் சீர் செய்யும் பணி நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் நகர தலைவர் வினோத் தலைமையில் குண்டும், குழியுமான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க. நகர பொதுச்செயலாளர் சுந்தரமுருகன் என்பவர் சாலையில் தேங்கி இருக்கும் மழை நீரில் அரைநிர்வாணமாக படுத்து கிடந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து நடவடிக்ைக எடுக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்