தேசிய கொடியுடன் பா.ஜ.க.வினர் ஊர்வலம்

திண்டுக்கல், நிலக்கோட்டையில் தேசிய கொடியுடன் பா.ஜனதா கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.

Update: 2022-08-13 17:32 GMT

சுதந்திர தின அமுதபெருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் திண்டுக்கல்லில் நேற்று ஊர்வலம் நடைபெற்றது. திண்டுக்கல் ஏ.எம்.சி. சாலை, மெங்கில்ஸ் சாலை சந்திப்பு பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு இளைஞர் அணி மாவட்ட தலைவர் அன்பு ஹரிகரன் தலைமை தாங்கினார்.

இதில் கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தனபாலன், இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் நாட்ராயன், பொருளாளர் செல்வக்குமார், செயலாளர் பாலாஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பா.ஜனதா இளைஞர் அணியினர் கைகளில் தேசியகொடியை ஏந்தியபடி சென்றனர். மேலும் ஒரு ராட்சத தேசியகொடியையும் கொண்டு சென்றனர். இந்த ஊர்வலத்தின் இறுதியில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மாகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல் நிலக்கோட்டையில் பா.ஜ.க. சார்பில் தேசிய கொடியுடன் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பொம்மு சுப்பையா தலைமை தாங்கினார். இதில், மாவட்ட தலைவர் தனபாலன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிலக்கோட்டை நால்ரோட்டில் தொடங்கிய இந்த ஊர்வலம், நிலக்கோட்டை இ.பி.காலனி, மாரியம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பெரிய காளியம்மன் கோவில் தெரு, சங்கரன் சிலை வழியாக சென்று நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்