பா.ஜ.க. மாவட்ட தலைவரின் மனைவி மீது போலீசில் புகார்

பா.ஜ.க. மாவட்ட தலைவரின் மனைவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2022-09-15 19:07 GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் இடிமுழக்கம் என்ற சுப்ரமணியன் ஆகியோர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வராஜின் மனைவி உமாஹைமவதி என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் தங்கராசு பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வராஜூன் மனைவி உமாஹைமவதி என்பவர் சமூக நீதிக்காக போராடி கொண்டிருக்கும் கி.வீரமணி, தொல்.திருமாவளவன், ஆ.ராசா ஆகிய தலைவர்களை அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்