அம்பேத்கர் சிலைக்கு மனு அளித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் அம்பேத்கர் சிலைக்கு மனு அளித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-13 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்பு நேற்று பா.ஜ.க. பட்டியல் அணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பட்டியல் அணி பிரிவு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாவட்ட தலைவர் கலிவரதன், நிர்வாகிகள் தியாகராஜன், சுகுமார், வடிவேல்பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் சதாசிவம் சிறப்புரையாற்றினார். இதில் பட்டியல் அணி நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், சுந்தர்ராஜ், முருகவேல், நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பட்டியலின மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க. அரசை கண்டித்தும், ஆண்டுதோறும் பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் தொகையை செலவிடாமல் ஏமாற்றி வரும் தமிழக அரசை கண்டித்தும், கோஷம் எழுப்பியவாறு அம்பேத்கர் சிலைக்கு மனு வழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்