பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் தேசிய கொடி ஊர்வலம்
நாட்டறம்பள்ளியில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடந்தது.;
நாட்டறம்பள்ளி பகுதியில் பா.ஜ.க. மாவட்ட மகளிர் அணி சார்பில் 75-வது ஆண்டு சுதந்திரதின விழாவை முன்னிட்டு தேசிய கொடியுடன் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு ஜோலார்பேட்டை நகர தலைவர் லோகநாதன், மாவட்ட மகளிர் அணி தலைவி மீனாட்சி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் ஏ.லோகேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர் ஜெயமாலா, மாவட்ட செயலாளர் கண்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்று (சனிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். மாவட்ட தலைவர் வாசுதேவன், மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி, மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் ஆனந்தன், மாவட்ட தலைவர் அருணா, மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் பிரபு மற்றும் மண்டல தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.