பா.ஜ.க. கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்
தேவதானப்பட்டி அருகே பா.ஜ.க. கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
தேவதானப்பட்டி அருகே செங்குளத்துபட்டி மெயின் ரோட்டில் பா.ஜ.க. கொடி கம்பம் உள்ளது. நேற்று காலை பார்த்தபோது கம்பத்தில் இருந்த கொடியை காணவில்லை. கம்பத்திற்கு கீழே எரிந்து கிடந்தது. இதையடுத்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் இரவு இந்த பகுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் கம்பத்தில் கட்டியிருந்த கொடியை கீேழ இறக்கி தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க. கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.