பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விளாத்திகுளம் அருகே பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் அங்குள்ள அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் சேதுராஜ் தலைமை தாங்கினார். புதூர் ஒன்றிய தலைவர் சிவபெருமாள், ஒன்றிய பொதுச் செயலாளர் பழனி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.