பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடையத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடையம்:
பாரதீய ஜனதா கட்சி கடையம் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் சார்பில் கடையம் யூனியன் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து பெண்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 வழங்க வேண்டும். காவூரில் உள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர்கள் செந்தில்குமார், ரத்தினகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், மாவட்ட பொது செயலாளர் அருட்செல்வன், துணை தலைவர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.