பா.ஜனதாவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதையொட்டி, சுரண்டை, செங்கோட்டையில் பா.ஜனதாவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சுரண்டை:
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். இதையொட்டி, மாவட்ட பா.ஜனதா தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் அந்த கட்சியினர் சுரண்டையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னதாக, பொட்டல் மாடசாமி கோவிலில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர். இதேபோல் செங்கோட்டை நகர பா.ஜனதா சார்பில் செங்கோட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல தலைவர் வேம்புராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.