பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்

பாவூர்சத்திரத்தில் பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2022-07-05 11:56 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகே தென்காசி மாவட்ட பா.ஜனதா சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் அருள்செல்வம், பாலகுருநாதன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். போராட்டத்தில் மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜா கண்ணன் கலந்து கொண்டு பேசினார். உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், தேர்தலில் அறிக்கையின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்தும் பேசினர். கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சுரேஷ் முருகன் நன்றி கூறினார். உண்ணாவிரத போராட்டத்தில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்