பா.ஜ.க. நிர்வாகியின் கடை சூறை
பா.ஜ.க. நிர்வாகியின் கடை சூறையாடப்பட்டது.;
பெரம்பலூர் நகர பா.ஜ.க. தலைவர் ஜெயக்குமார் புதிய பஸ் நிலையத்தில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மர்மநபர்கள் அந்த கடையை அடித்து நொறுக்கிவிட்டு சென்றனர். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் கடையை அடித்து நொறுக்கியதாக பா.ஜ.க.வினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.