பா.ஜனதா பிரமுகர் தண்ணீரில் மிதந்தவாறு யோகா பயிற்சி
திருச்செந்தூர் அருகே பா.ஜனதா பிரமுகர் தண்ணீரில் மிதந்தவாறு யோகா பயிற்சி செய்தார்.
திருச்செந்தூர்:
சர்வதேச யோக தினத்தை முன்னிட்டும், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை ஆதரித்தும், இளைஞர்களுக்கு நாட்டின் மீது தேச பற்று அதிகரித்திடவும், விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பா.ஜனதா தூத்தக்குடி தெற்கு மாவட்ட முன்னாள் துணை தலைவர் செந்தில்வேல், மேலப்புதுக்குடி அருஞ்சுனைக்காத்த அய்யனார் கோவில் அருகில் உள்ள குளத்தில் தண்ணீரில் மிதந்த படி சுகாசனம், பத்மாசனம், சவாசனம், சூர்ய நமஸ்காரம் உள்பட பல்வேறு ஆசனங்களை செய்தார். தொடர்ந்து தண்ணீரில் மிதந்த படி அக்னிபாத் திட்டத்தில் இணைந்திட வலியுறுத்தி கோஷமிட்டும், செய்தித்தாள்களை வாசித்தும், ஐஸ்கிரீம், வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டும் ஆசனம் செய்தார்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில மருத்துவரணி செயலாளர் அரவிந்த், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.