எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை

எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-12-16 18:45 GMT

எட்டயபுரம்:

முறைகேடாக சிட்டா வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எட்டயபுரம் மண்டல பா.ஜ.க. சார்பில் நேற்று எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. பா.ஜ.க. ஒன்றிய தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ராம்கி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளர் ஆத்திராஜ், ஒன்றிய பொதுச் செயலாளர் ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நெசவாளர் அணி துணைத் தலைவர் நாகராஜன், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் ஜெயகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது, சப்-இன்ஸ்பெக்டர் முத்து விஜயன், வருவாய் ஆய்வாளர் கோமதி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தாசில்தார், போலியாக சிட்டா வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்