பா.ஜ.க. வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் பா.ஜ.க. வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-27 18:34 GMT

திண்டிவனம், 

சென்னையில் வக்கீல் ஜெய்கணேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவுவாயில் முன்பு பா.ஜ.க. வக்கீல் அணி சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் செந்தில், முருகன், பாலசுப்பிரமணியம், ரவிச்சந்திரன், சரவணன், ஆதிசெந்தில்குமார், லெனின் உட்பட பலர் கலந்து கொண்டு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வக்கீல் ஜெய்கணேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழ்நாட்டில் வக்கீல் பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரியும் கண்டன கோஷம் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்