பா.ஜ.க. சார்பில் இன்று நடக்க இருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்: சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கோவில்பட்டியில் பா.ஜ.க. சார்பில் இன்று நடக்க இருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

Update: 2023-09-12 18:45 GMT

கோவில்பட்டி(கிழக்கு):

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மந்தித்தோப்பு சாலை பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி இன்று(புதன்கிழமை) பா.ஜ.க.சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதை தொடர்ந்து நேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் லெனின் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் கமலா, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன், போக்குவரத்து ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், பா.ஜ.க. நகரதலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுெசயலாளர் வேல்ராஜா, நகராட்சி கவுன்சிலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மந்தித்தோப்பு சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, நகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சாலை விரிவாக்கம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் நிலம் எடுப்பு செய்வதா? அல்லது சட்டப்படி நிலம் எடுப்பு ெசய்வதா? என்பது குறித்து முன்னோடி ஆய்வு மற்றும் பட்டாதாரர்களை அழைத்து பேசும் பணி 10 நாட்களில் ஏற்பாடு செய்யப்படும். தொடர் நடவடிக்கைகள் ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பா.ஜ.க.வினர் இன்று நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் மற்றும் தொடர் போராட்டங்களை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்