அதிமுகவை சேர விடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி - அமைச்சர் கே.என்.நேரு தாக்கு
அதிமுகவை சேர விடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்கிறது.அதிமுகவும் திமுகவும் அண்ணன், தம்பி என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை,
திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் நேரடி ஆய்வு மேற்கொண்டு அமைச்சர் கே என் நேரு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு கூறியதாவது:-
வெட்கத்தை விட்டு கூறுகிறேன். மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுகிறார்கள். பிளவு பட்டு கிடக்கும் அதிமுகவை சேரவிடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்து வருகிறது.
அதிமுகவினரும், திமுகவினரும் அண்ணன் தம்பி மாதிரி. பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட ஊதி ஊதி பெரிதாக்கி காட்டுகின்றனர். அதனால் தான் அதிமுகவை சேரவிடாமல் பாஜக முட்டுக்கட்டை போடுகிறது என்றார்.