2024 மக்களவை தேர்தலில் 25 எம்.பி.க்களை பாஜக பெறுவது உறுதி - அண்ணாமலை பேச்சு
2024 மக்களவை தேர்தலில் 25 எம்பிக்களை பாஜக பெறுவது உறுதி என கூறினார்.
கோவை அன்னூரில் சிப்காட் தொழில் பூங்கா - நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது ;
அன்னூர் விவசாய நிலத்தை எடுக்க முயன்றால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்குவேன். இன்று நடைபெறும் போராட்டம் விவசாயிகளுக்கான போராட்டம்.
தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்டு தொழிற்சாலைகள் வராமல் 48,195 ஏக்கர் நிலங்கள் காத்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு திமுக அரசு அறிவித்த நாங்குநேரி தொழிற்பேட்டையில் (2518 ஏக்கர்) ஒரு நிறுவனம் கூட இல்லை. தமிழக நலனில் பிரதமர் மோடி அதிக அக்கறை செலுத்துகிறார்.
தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதால் எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது. 2024 மக்களவை தேர்தலில் 25 எம்பிக்களை பாஜக பெறுவது உறுதி என கூறினார்.