திருச்செந்தூரில் பா.ஜ.க. சார்பில்வாஜ்பாய் பிறந்த நாள் விழா
திருச்செந்தூரில் பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் நகர பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சித்ராங்கன் தலைமை தாங்கி, வாஜ்பாய் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நலத்திட்ட உதவியாக ஒரு பெண்ணுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கினார். மேலும் 25 பெண்களுக்கு சேலை மற்றும் பண முடிப்பும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், இளைஞர் அணி மாநில செயலாளர் பூபதி பாண்டியன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் மகேஸ்வரன், மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் ஸ்டீபன் லோபோ, நகர செயலாளர் மீனாட்சி, டேட்டா மேனேஜ்மென்ட் வக்கீல் கிரீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகர தலைவர் நவமணிகண்டன் செய்திருந்தார்.
இதேபோன்று, கழுகுமலையில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காந்தி மைதானத்தில் நடந்த விழாவுக்கு கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் மதிராஜசேகரன், முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் போஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து வாஜ்பாய் உருவ படத்திற்கு நிர்வாகிகள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய பொது செயலாளர் சதீஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு விஜயபழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.