சங்கராபுரத்தில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-16 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய தலைவர் பிரகாசம், மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஜெயதுரை, ஒன்றிய பொதுச்செயலாளர்கள் தேவரத்தினம், பாஸ்கர், மாநில நிர்வாகி ஜெயவர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். பால் மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் செந்தில், மணிகண்டன், மணியோக செல்வம், பிரகாஷ், ஆனந்தி, அலமேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்