பா.ஜ.க.வுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல...தீராத வன்மம் - சு.வெங்கடேசன்

கர்நாடாகவிற்கு முதல் கட்ட வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-04-27 12:24 IST

சென்னை,

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முதல் கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் நிதியில் இருந்து ரூ.115.45 கோடியும், ரூ.397 கோடி வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து ரூ.160.61 கோடியும் நிவாரண நிதி விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3,454 கோடி அறிவிப்பு.

தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ ரூ,38,000 கோடி.

பா.ஜ.க.வுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம். " என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்