பாஜக நிர்வாகிகள் இன்று கவர்னருடன் சந்திப்பு..!

கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக நிர்வாகிகள் இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Update: 2023-04-25 03:23 GMT

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக நிர்வாகிகள் சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசுகின்றனர். பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் பாஜக பட்டியல் அணி மாநில நிர்வாகிகள் கவர்னரை சந்திக்க உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது எஸ்.சி, எஸ்.டி, இடஒதுக்கீட்டை சரியாக பின்பற்றுவதில்லை என்றும் அதற்கான நிதியை பயன்படுத்தவில்லை என்றும் பாஜக நிர்வாகிகள் கவர்னரிடம் புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்