பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உருவப்பொம்மை எரிப்பு

ராணிப்பேட்டையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உருவப்பொம்மையை தி.மு.க.வினர் எரித்தனர்.;

Update: 2022-08-13 17:06 GMT

மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பா.ஜ.க.வினர் செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து நேற்று மாலை ராணிப்பேட்டை முத்துக்கடையில் தி.மு.க.வினர், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் உருவப்பொம்மையை எரித்தனர். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை நகர தி.மு.க. செயலாளர் பூங்காவனம், துணை செயலாளர் குமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்