கமுதி,
தி.மு.க. மக்கள் விரோத போக்கை கண்டித்தும், தமிழகத்தில் விலைவாசி உயர்வையும் கண்டித்தும் கமுதி மத்திய ஒன்றியம் ராமசாமி பட்டியில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் கணபதி, மத்திய ஒன்றிய தலைவர் பூபதி ராஜா, மாவட்ட செயலாளர் லயன் கே சரவணன், பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட செயற்குழு ஆனந்த பழனி, வரதராஜன், தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் சண்முகவேல், கிளை தலைவர் கருப்பசாமி, கதிரேசன், இளைஞர் அணி செயலாளர் மோகன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட துணை தலைவர் மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.