ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியா? இன்று கூடுகிறது மாநில செயற்குழு
பாஜக மாநில செயற்குழு கூட்டம், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
கடலூர்,
கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கடந்த ஓராண்டில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும், வரும் ஆண்டில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது.
மேலும், வரும் 2024-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. மாலையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது.