தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்

தக்கலையில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்

Update: 2023-09-06 20:32 GMT

தக்கலை, 

பட்டியல் சமுதாய மக்களுக்கான நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்தவில்லை எனவும், அதனை கண்டிப்பதாகவும் கூறி பா.ஜ.க. எஸ்.சி. அணி சார்பில் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

எஸ்.சி.அணி மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் உண்ணிகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சிவகுமார், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் முத்துராமன், எஸ்.சி.அணி மாநில நிர்வாகி கதிரேசன் உள்பட பலர் பேசினர். இதில் நிர்வாகிகள் சீனிவாச பிரம்மா, சுரேஷ்குமார், ஹரிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்