நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்

எதிர்க்கட்சிகளின் வாக்குகளை சிதறவிடாமல் பாதுகாத்தால் தான் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

Update: 2023-05-07 18:45 GMT

கொரடாச்சேரி:

எதிர்க்கட்சிகளின் வாக்குகளை சிதறவிடாமல் பாதுகாத்தால் தான் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

பேட்டி

திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசு வெற்றிகரமாக 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். கேரளா ஸ்டோரி திரைப்படம் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை திட்டமிட்டு இந்த திரைப்படத்தின் மூலம் திணிக்கிறார்கள்.

தடை விதிக்க வேண்டும்

இந்தியாவின் பிரதமர் ஒரு திரைப்படத்திற்கு வக்காலத்து வாங்கி பேசுவது என்பது வேடிக்கையாக உள்ளது. தமிழக அரசு கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த திரைப்படம் ெதாடர்ந்து திரையிடப்பட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கும், அமைதியை கெடுப்பதற்கும் வழி வகுத்து விடும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. முதல்-அமைச்சர் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். நிறைவேற்ற வேண்டிய சில வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

எதிர்க்கட்சிகள்

எந்தெந்த வகையில் எல்லாம் இந்தியை திணிக்க முடியுமோ, நிலைநாட்ட முடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் கூட ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாறி உள்ளது.2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறிவிடாமல் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்.

தொழிலாளர்கள் புலம்பெயர்வது தவிர்க்க முடியாது. உலகம் முழுவதும் நடக்கக்கூடியது. புலம்பெயர்ந்து தான் பணியாற்ற முடியும். ஒரே இடத்தில் பணியாற்ற முடியாது புலம்பெயர்வதால் எந்த தேசமும் பாதிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்