பா.ஜ.க. - அ.ம.மு.க. கூட்டணி - தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து

தொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. மற்றும் அ.ம.மு.க. இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.;

Update:2024-03-20 15:43 IST

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அ.ம.மு.க. அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை பா.ஜ.க. தலைமையகத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. மற்றும் அ.ம.மு.க. இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அதன்படி நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் கூறும்போது, "போட்டியிடும் இரண்டு தொகுதிகள் எவை என்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும். நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்கு தரப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற அ.ம.மு.க. தொண்டர்கள் உழைப்பார்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்