பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்

பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்

Update: 2022-12-06 18:45 GMT

ராமநாதபுரத்தில் நகர் பா.ஜ.க. சார்பில் ஆலோசனை கூட்டம் பாண்டிச்செல்வன் தலைமையில் நடந்தது. மாவட்ட பொருளாளர் நகர் பார்வையாளர் தரணி முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் மணிமாறன், செயற்குழு உறுப்பினர் வீரபாகு, நகர் துணைத்தலைவர் பிரிதிவிராஜ், நகர் செயலாளர் பிரவீன்குமார், உறுப்பினர் விஸ்வா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிளை கமிட்டி அமைத்தல், உறுப்பினர் சேர்த்தல், கொடியேற்றுதல் ஆகிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்