பா.ஜ.க. பிரமுகரை தாக்கிய 3 பேர் கைது

பா.ஜ.க. பிரமுகரை தாக்கிய 3 பேர் கைது

Update: 2023-01-13 18:49 GMT

மேலூர்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றிய பா.ஜ.க. தலைவர் மணிகண்டன் (வயது 32). கரும்பு வியாபாரம் செய்யும் இவர் மதுரை மாவட்டம் மேலூரில் பல்லவராயன்பட்டியில் பொங்கல் கரும்புகளை வாங்கி அவற்றை லாரியில் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் மணிகண்டனை தாக்கினர். மேலும் அவரது காரையும் அடித்து நொறுக்கினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேலூர் போலீசார் முத்துவேல்பட்டி கணேசன்(34), சொக்கம்பட்டி கணேசன்(47) மற்றும் தமிழ்செல்வன்(35) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்