பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 3 பேர் படுகாயம்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 3 பேர் படுகாயம்

Update: 2022-12-12 18:45 GMT

வேப்பூர்

நல்லூர் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. ஒன்றிய இளைஞர் அணி தலைவர் பெரியநெசலூர் செல்வராஜ் மகன் சீனிவாசன்(வயது 36), பொதுச்செயலாளர் காட்டுமயிலூர் சேகர் மகன் விஜய்(23) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் நல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். நேற்று நல்லூர்-கண்டப்பங்குறிச்சி சாலையில், நல்லூர் ஏரிக்கரை அரசமரம் அருகே வந்த போது எதிரே வந்த கார் பா.ஜ.க. நிர்வாகிகள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சீனிவாசன், விஜய் ஆகிய இருவரும் திருச்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும், கார் டிரைவர் இளங்கியனூர் செந்தில்குமார்(40) விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்