மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கீழ்குந்தா, கரியமலை மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன.
சமீபகாலமாக அப்பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகமாக நடமாடி வருகின்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மஞ்சூர் டவுன் பகுதியில் குடியிருப்புகளுக்குள் காட்டெருமை ஒன்று புகுந்து நடமாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகன போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.