காட்டெருமை உலா; வாகன ஓட்டிகள் அச்சம்

குன்னூர்-கோத்தகிரி சாலையில் காட்டெருமை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

Update: 2022-09-07 15:04 GMT

குன்னூர், 

குன்னூரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டெருமைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருகின்றன. விளைநிலங்களுக்குள் புகுவதால், பயிர்கள் சேதம் அடைகின்றன. இதனால் குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களில் காய்கறி பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். குன்னூர்-கோத்தகிரி சாலையில் காட்டெருமை ஒன்று நடமாடி வருகிறது. வயது முதிர்ந்த காட்டெருமை சாலையோரத்தில் படுத்து ஓய்வெடுத்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். கடந்த சில நாட்களாக அதே பகுதியில் காட்டெருமை முகாமிட்டு உள்ளது. இதனால் அதன் உடல்நிலை எவ்வாறு உள்ளது என்பதை வனத்துறையினர் கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்