நாமக்கல்லில் பிரியாணி சாப்பிடும் போட்டி - ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள்

போட்டிக்காக 100-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்த நிலையில், 35 பேர் மட்டும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update: 2023-02-02 17:17 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள பிரபல தனியார் பிரியாணி உணவகத்தில் இன்று(வியாழக்கிழமை) பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.5,001 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள அதிக அளவிலான இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் போட்டிக்காக பதிவு செய்திருந்த நிலையில், 35 பேர் மட்டும் குலுக்கல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இன்று பிற்பகல் 2.15 முதல் 2.35 வரை பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது.

இதில் அதிக அளவில் பிரியாணி சாப்பிட்ட நாமக்கல்லைச் சேர்ந்த சரவணன் என்பவர், 20 நிமிடத்தில் 2 கிலோ 600 கிராம் பிரியாணி சாப்பிட்டு முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.5,001 ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை ஜீவா, மூன்றாம் இடத்தை கவின், நான்காம் இடத்தை சதீஷ்குமார் ஆகியோர் பிடித்தனர். இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்