ஓட்டப்பிடாரம் இல்லத்தில் பிறந்தநாள் விழா:வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஓட்டப்பிடாரம் இல்லத்தில் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தப்பட்டது.

Update: 2023-09-05 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி. சிலைக்கு அரசு சார்பிலும், அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை ெசலுத்தினர்.

அரசு விழா

ஓட்டப்பிடாரத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ வெண்கல சிலைக்கு கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏ எம்.சி.சண்முகையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வ.உ.சி. இல்லத்திலுள்ள அவரது வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை கலெக்டர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவரது கொள்ளு பேத்தி செல்விக்கு அரசு சார்பில் கலெக்டர் சால்வை அணிவித்து கவுரப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய், மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரமேஷ்குமார், சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், யூனியன் ஆணையாளர் சிவபாலன், கூடுதல் ஆணையாளர் ராம்ராஜ், மண்டல துணை தாசில்தார்கள் மகாராஜன், திருமணி ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க

ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், மோகன், வளர்மதி, சண்முகநாதன், செல்லப்பாண்டியன், அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏக்கள் மோகன், சின்னப்பன், ஓட்டப்பிடராம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காமாட்சி என்ற காந்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜ.க.

வ.உ.சி. சிலைக்கு பா.ஜ.க. சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர் சங்கம்

வ.உ.சி. சிலைக்கு ஓட்டப்பிடாரம் வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் ஜெகதீஷ் தலைமையில் செயலாளர் மரகதவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அ.ம.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கரன்சிங் மற்றும் அ.ம.மு.கவினர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க

ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் தே.மு.தி.கினர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் வட்டார சைவ வேளாளர் சங்கம் சார்பில் வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா காசி விஸ்வநாதர் விசாலம் அம்பாள் கோவில் முன்பு நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வ.உ.சி. போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவிற்கு வீரபாகு பிள்ளை, ராமநாத பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் ஆறுமுகம், வட்டார செயலாளர் முருகன், வட்டார பொருளாளர் அழகப்பன், துணைச்செயலாளர் சுந்தர், அமைப்பாளர் வெங்கடாச்சலம் மற்றும் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். விக்ரம் பிள்ளை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்