ஓட்டப்பிடாரம் இல்லத்தில் பிறந்தநாள் விழா:வ.உ.சி.சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

ஓட்டப்பிடாரத்திலுள்ள வ.உ.சி. இல்லத்தில் அரசு சார்பில் நடந்த பிறந்தநாள் விழாவில் இல்லத்தில், அவரது சிலைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2023-09-05 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரத்தில் அரசு சார்பில் வ.உ.சி. இல்லத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில், அவரது சிலைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாைத செலுத்தினார்.

அரசு விழா

ஓட்டப்பிடாரத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ வெண்கல சிலைக்கு கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏ எம்.சி.சண்முகையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வ.உ.சி. இல்லத்திலுள்ள அவரது வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை கலெக்டர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவரது கொள்ளு பேத்தி செல்விக்கு அரசு சார்பில் கலெக்டர் சால்வை அணிவித்து கவுரப்படுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய், மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரமேஷ்குமார், சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், யூனியன் ஆணையாளர் சிவபாலன், கூடுதல் ஆணையாளர் ராம்ராஜ், மண்டல துணை தாசில்தார்கள் மகாராஜன், திருமணி ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்