மோப்ப நாய்க்கு பிறந்தநாள் கொண்டாட்டம்
மோப்ப நாய்க்கு பிறந்தநாள் கொண்டாட்டம்
கூடலூர்
முதுமலை புலிகள் காப்பகத்தில் ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த டைகர் என்ற மோப்ப நாய் வளர்க்கப்பட்டு வருகிறது. இது மாவட்டத்தில் நடைபெறும் வன குற்ற சம்பவங்களில் துப்பு துலக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 13 வன குற்றங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க உதவியாக இருந்துள்ளது. பிறந்து 6 மாத குட்டியாக முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட அந்த நாய்க்கு, தற்போது 2 வயது ஆகிறது. இந்த நிலையில் தனது 2-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியது. இதையொட்டி வனத்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதன்படி வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சூழ முதுமலை உதவி கள இயக்குனர் திவ்யா, கேக் வெட்டி அந்த மோப்ப நாய்க்கு வழங்கினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தனர்.