ஆதரவற்ற 110 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்
முதுகுளத்தூர் அருகே ஆதரவற்ற 110 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது.;
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமாயி.(வயது 110). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். ஆதரவற்ற நிலையில் உள்ள ராமாயி கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அவர் 110 வயதை எட்டியதை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் மூதாட்டிக்கு புத்தாடை வாங்கி கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள். தற்போது மூதாட்டிக்கு கொண்டாடிய பிறந்த நாள் கொண்டாட்டம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.